Wednesday, July 18, 2007

மனச் சோர்வு
காதுக்கு ஒரு கையிருந்தால் ..........பொத்திக்கொள்ளும்
மனதுக்கு ஒரு காதிருந்தால்.............மூடிக்கொள்ளும்
நொந்து வலியில் துடிக்கையில்...........................நம்பிக்கைகள்
தொலைதேச உறவாய் பரிமளிக்க.....................ரட்சிப்பவனும்
கைபிடித்து செல்ல மறுத்து விட................ஆதரவு தேடி
மனக்கைகள் துழாவும் ......................................வெற்றிடத்தில்

Tuesday, July 17, 2007

ஏ தமிழகமே!
நீ மாரியைக் கண்டு பயந்ததுண்டு
மேரியையும் மதித்ததுண்டு
முருகனைக் காண வேல் குத்துவாய்
அல்லா சொன்னதாய் பட்டினி கிடப்பாய்
அடியாராய் வெறி கொண்டு தொழுவாய்
புழு ஊற தவம் கிடப்பாய்
பெற்ற பிள்ளையை விட பிள்ளையாரை நம்புவாய்
தெய்வம் கூரையை பிய்காதா என உள்ளூர தவம் கிடப்பாய்
தேடலில் எந்த கழிவிலும் குளத்திலும் முங்கி எழுவாய்
நேர் பின்னே அகதியாய் கடவுள் மாறி உன்னை தேடி வந்தும்
ஒரு நொடியில் மனதை இறுக்கி விலகுவாய்
இது
எத்தனாவது முறை?
எண்ணற்ற முறைகளாயிற்று
சூல் கொண்ட மனம் .........உவப்பேறும்
சூல் கொண்டதை சீராட்டவும் பாராட்டவும் என கனவுகள் விரியும்
ஒரு முறையும் உற்சாகத்திற்கு குறைவிராது
துள்ளும் களிப்புறும் பகிர மா...ட்டோமா என தவிக்கும்
எல்லாம் ஓரு சில இரவுகளில்
பகல் நேர இருட்டடிப்பில் காணாது கலைந்து விடும்
சோர்வுற்ற மனம்
தளராது வேதாளமாய் மறுபடி சூல் கொள்ளும்.