ஏ தமிழகமே!
நீ மாரியைக் கண்டு பயந்ததுண்டு
மேரியையும் மதித்ததுண்டு
முருகனைக் காண வேல் குத்துவாய்
அல்லா சொன்னதாய் பட்டினி கிடப்பாய்
அடியாராய் வெறி கொண்டு தொழுவாய்
புழு ஊற தவம் கிடப்பாய்
பெற்ற பிள்ளையை விட பிள்ளையாரை நம்புவாய்
தெய்வம் கூரையை பிய்காதா என உள்ளூர தவம் கிடப்பாய்
தேடலில் எந்த கழிவிலும் குளத்திலும் முங்கி எழுவாய்
நேர் பின்னே அகதியாய் கடவுள் மாறி உன்னை தேடி வந்தும்
ஒரு நொடியில் மனதை இறுக்கி விலகுவாய்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
"அகதியாய் கடவுள் மாறி உன்னை தேடி வந்தும்
ஒரு நொடியில் மனதை இறுக்கி விலகுவாய்....."
அருமையான வரி. வாழ்த்துக்கள்.
Post a Comment